

கம்பத்தில் நகர் மன்ற உறுப்பினர் பதவிக்கு வைப்பு தொகை கட்டணமாக சில்லறை காசுகளை திமுக பெண் வேட்பாளர் கொண்டு வந்தார்.
தேனி மாவட்டம், கம்பம் 30 ஆவது வார்டுக்கு திமுக வேட்பாளராக என்.ஏ ரம்யா தேவி அறிவிக்கப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் வைப்புத் தொகை கட்டணமாக ரூபாய் இரண்டாயிரத்தை, 1 ரூபாய், 2 ரூபாய் சில்லரை நாணயங்களாக கொண்டுவந்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பணத்தை நாணயங்களாக அல்லாமல் ரூபாயாக செலுத்துங்கள் என்று கூறவே 2000 ரூபாய் தொகையை காசாளர் அறையில் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டார். வேட்பாளர் வைப்பு தொகை ரூபாய் 2000-ஐ சில்லரை காசுகளாகக் கொண்டு வந்தது நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.