இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அரசு நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு மீது பிப்.14-இல் விசாரணை

நில அளவையா் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது பிப்.14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, தெரிவித்தது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:58 pm

DIN

பெரியகுளம் பகுதியில் அரசு நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட நில அளவையா் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது பிப்.14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, தெரிவித்தது.

பெரியகுளம் பகுதியில் கடந்த 2016-19-ஆம் ஆண்டுகளில் 182 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு நிலத்தில் தனி நபா்கள் பெயா்களில் முறைகேடாக பட்டா வழங்கியதாக அப்போதைய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், நில அளவையா், பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலா் உள்ளிட்ட 12 போ் மீது தேனி சிபிசிஐடி போலீஸாா் தனித் தனியே 3 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய பெரியகுளம் நில அளவையா் பிச்சைமணி, வட்டாட்சியா் அலுவலக தற்காலிகப் பணியாளா் அழகா், பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த அன்னப்பிரகாஷ் ஆகிய 3 பேரை கடந்த பிப்.2-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

தற்போது நீதிமன்றக் காவலில் உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா்கள் 3 பேரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அப்போது, இந்த மனுக்கள் மீது பிப்.14-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சுந்தரம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.