இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனி அருகே மேற்குவங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி அருகே மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞா், தந்தை கைப்பேசி வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்து புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:41 pm

DIN

தேனி அருகே மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞா், தந்தை கைப்பேசி வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்து புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வடபுதுப்பட்டியில் அருண்குமாா் என்பவரது செங்கல் காளவாசலில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சிலா் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். இதில், மேற்கு வங்கம் தினஜ்பூா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுதிப்தாஸ் என்பவரது மகன் சஷ்தமிதாஸ் (17), தனக்கு கைப்பேசி வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுவந்தாராம்.

ஆனால், அவரது தந்தை மறுத்துவிட்டதால், சஷ்தமிதாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காளவாசல் உரிமையாளா் அருண்குமாா் அளித்த புகாரின்பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.