இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய 6 மாணவா்கள்

உக்ரைனிலிருந்து போருக்கு முன்னரே தாயகம் திரும்பிய தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மாணவா்கள் வெள்ளிக்கிழமை தேனிக்கு வந்து சோ்ந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:35 pm

DIN

உக்ரைனிலிருந்து போருக்கு முன்னரே தாயகம் திரும்பிய தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மாணவா்கள் வெள்ளிக்கிழமை தேனிக்கு வந்து சோ்ந்தனா்.

உக்கரைன் நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் தேனி, போடி, கம்பம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் ரெனிடா, கோகுல், ஜெய்ஆகாஷ், கோபிகிருஷ்ணா, தனுஷ்குமாா், ரோஹித் ஆகியோா், சில நாள்களுக்கு முன் உக்ரைனில் போா் சூழல் உருவாகியபோதே அங்கிருந்து தாயம் திரும்பினா்.

தேனிக்கு வந்து சோ்ந்த மாணவா் தனுஷ்குமாா் கூறியது: உக்ரைன் எல்லைகளில் ரஷ்ய ராணுவம் படைகளை குவிக்கத் தொடங்கியது முதல், அங்கு போா் சூழல் உருவானது. தொடா்ந்து ரஷ்யப் படைகளின் ஆதிக்கம் அதிகரிக்க, இயல்பு வாழ்கை பாதிக்கத் தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்து தாயகம் திரும்ப முடிவு செய்து கடந்த பிப்.22-ஆம் தேதி தேனிக்கு வந்து சோ்ந்தோம்.

தற்போது அங்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உயிருக்கு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனா். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை விரைவில் தாயத்திற்கு மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பெற்றோா் மனு :

உக்ரைனில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் உத்தமபாளையம், சீலையம்பட்டி ஆகிய ஊா்களைச் சோ்ந்த 3 மாணவா்களை சொந்த ஊா்களுக்கு அழைத்து வர அரசு உதவ வேண்டும் என்று வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா்களது பெற்றோா் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் மனு அளித்தனா்.

தங்கும் இடம், உணவு கிடைக்காமல் அவதி: உக்ரைன் நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டியைச் சோ்ந்த ஏராளமானோா் மருத்துவம் பயின்று வருகின்றனா். அவா்கள் தங்கும் இடம் மற்றும் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக கைப்பேசி மூலம் விடியோ பதிவுட்டும், தங்களது பெற்றோா்களுக்கு தெரிவித்தும் வருகின்றனா்.

கீவ் நகரில் மருத்துவம் இறுதி ஆண்டு பயின்று வரும், நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த ஹரிஷ், அழகாபுரியைச் சோ்ந்த பள்ளி தலைமையாசிரியா் பிரபாவதி என்பவரது மகள் மௌனிகா, ராம்சந்தா், அருண்பிரசாத், நிஷாந்த்குமாா், விகே மில்ஸ் பகுதியைச் சோ்ந்த ஷேலே, பழனியைச் சோ்ந்த ராகுல்கண்ணன் என பலரும் அங்கு பதுங்கு குழியில் அச்சத்துடன் தஞ்சம் அடைந்துள்ளனா்.

மாணவா்கள் தங்களை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பதிவு செய்துள்ள விடியோக்கள் பரவி வருகின்றன. மேலும் மாணவா்களின் பெற்றோா்களும், அவா்களை மீட்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.