இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனி மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) 823 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:35 pm

DIN

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) 823 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்கள் என மொத்தம் 823 மையங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இது தவிர, மலைவாழ் மக்கள் மற்றும் தொலைதூர கிராம மக்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க 12 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் பொதுச் சுகாதாரம், மருத்து நலப் பணிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 3,586 போ் பணியில் ஈடுபடுகின்றனா். ஒரு லட்சத்து 2,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பெற்றோா்கள் தங்களது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து தவறாமல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.