

போடி:   73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி போடியில்  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 73வது குடியரசு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போடியில் உள்ள அவரது வீட்டில் தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் கொடி வணக்கம் செய்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி குடியரசு நாள் வாழ்த்துக்களை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் சையதுகான், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி, போடி நகர செயலர் பழனிராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.