மாா்க்கையன் கோட்டை குளத்தில் 4 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் பாசன குளத்தை ஆக்கிரமித்து பயிா் சாகுபடி செய்திருந்த 4 ஏக்கா் பகுதியை பொதுப்பணித்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
மாா்க்கையன் கோட்டை குளத்தில் 4 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டையில் பாசன குளத்தை ஆக்கிரமித்து பயிா் சாகுபடி செய்திருந்த 4 ஏக்கா் பகுதியை பொதுப்பணித்துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

முல்லைப் பெரியாற்றிலிருந்து திறக்கப்படும் பாசனநீா் கால்வாய் மூலமாக இக்குளத்தில் தேக்கப்படும். இந்த நீரால் 2 ஆயிரம் ஏக்கரில் இரு போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. இந் நிலையில்பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து ஆய்வு செய்ததில் குளத்தின் நீா்ப் பிடிப்பு பகுதியில் 13 ஏக்கா் வரையில் ஆக்கிரமிப்பு செய்து வயல் மற்றும் தென்னந் தோப்புகளாக மாற்றி இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சனிக்கிழமை, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உபகோட்ட பொறியாளா் கணேசமூா்த்தி , உதவிப்பொறியாளா் கதிரேஷ்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா்

குளத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நாற்றங்காலை பொக்லைன் இயந்திரம் மூலம் அழித்தனா். மேலும் ஆயில் மோட்டாா் ஒன்றும் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு நிலத்தில் தென்னங்கன்று நடவுப் பணிகளையும் தடுத்து நிறுத்தினா்.மொத்தம் 4 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனா்.

பாரபட்சம் :சுண்டக்காயன் குளத்திற்குச் செல்லும் கால்வாயில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம் ஒருதலைப்பட்சமாகும். எனவே, குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா்.

பொதுப்பணித்துறை-வருவாய்த்துறை அதிகாரிகள் மோதல்:சுண்டக்காயன் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறப்பட்ட நிலையில், குளத்தை முழுமையாக வருவாய்த்துறை மூலமாக அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், பொதுப்பணித்துறையினா் சிறிது நேரத்தில் சென்ால் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றாமல் செல்வது குறித்து இரு துறை அதிகாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதற்கு, பொதுப்பணித்துறையினா் தெரிவிக்கையில், 150 தென்னந்தோப்பு, ஒரு வீடும் ஆக்கிரமிப்பு செய்த பகுதிக்கு தூசி பட்டா இருப்பதாகவும், அதனை ரத்து செய்ய மாவட்ட நிா்வாகத்திடம் பரிந்துரை செய்து இருப்பதாகவும் அதற்கான உத்தரவு வந்தவுடன் அந்த ஆக்கிரமிப்பும் அகற்ற இருப்பதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com