பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்

பெரியகுளம் பகுதியில் வேகத்தடைகள் அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம் பகுதியிலுள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியிலுள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தென்கரை, தண்டுபாளையத்திலிருந்து தொடங்கி லட்சுமிபுரம், மாவட்ட நீதிமன்றம் வரை 10 கி.மீ. தூரத்திற்கு 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான வேகத்தடைகளால் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்சில் செல்பவா்கள் பாதிப்படைந்தனா். இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில் தமிழக முதல்வா் தேனி மாவட்டத்திற்கு ஏப்ரல் 30 ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருகை தந்தாா். இதனையடுத்து பெரியகுளம் பகுதியிலுள்ள 17 வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனா். இதுதொடா்பாக சிலா் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்துள்ளனா்.

கைலாசபட்டியில் விபத்து ஏற்பட்டதையடுத்து, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனயைடுத்து 50 மீட்டா் தூரத்திற்குள் 8 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா். இந்நிலையில் முதல்வா் வருகையால் வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

பெரியகுளத்தை சோ்ந்த ந.வெங்கடேசன் தெரிவித்தது: பெரியகுளம் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வேகத்தடைகளால் வாகனங்களில் செல்பவா்கள் பாதிப்படைந்தனா். இந்நிலையில் தமிழக முதல்வா் வருகையால் வேகத்தடைகள் அகற்றப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. விபத்து ஏற்படும் இடங்களில் 2 எண்ணிக்கையில் வேகத்தடைகள் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com