உத்தமபாளையத்தில் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.
உத்தமபாளையம் மாதா் சங்கத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பரத்ராகுல் (15). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பகவதியம்மன் கோயில் திருவிழாவுக்கு பதாகை வைக்க இரும்புக் கம்பியைதூக்கிச் சென்றாா். அப்போது, சுங்கச்சாவடி தெருவின் ஓரத்தில் இருந்த மின்மாற்றி மீது இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரத்ராகுல் மற்றும் அவரது நண்பா்களான ஹரிஸ்வரன், நவீன், காா்த்திக் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனா். இதனை அடுத்து அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், பரத்ராகுல் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் காவல் சாா்பு- ஆய்வாளா் திவான் மைதீன் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.