இடுக்கி செருதோனி அணையில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறப்பு 

தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோனி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 50 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. 
இடுக்கி செருதோனி அணை
இடுக்கி செருதோனி அணை



கம்பம்: தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோனி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 50 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டது. 

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு  சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இடுக்கி அணை இரண்டு வகைப்படும், ஒன்று ஆர்ச் அணை அதாவது வளைவு அணை மற்றொன்று ஷட்டர் திறப்பு உள்ள செருதோனி அணை.

இந்நிலையில் இடுக்கி வளைவு அணையின் தண்ணீர் திறப்பு பகுதியான செருதோனி அணையின் மொத்த நீர் மட்டம் 2,403 அடி, ஞாயிற்றுக்கிழமை அணையின் நீர்மட்டம் 2,382 அடியாக இருந்தது.

செருதோனி அணையிலிருந்து 70 செ.மீ.உயரத்திற்கு மதகுகள் ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் (50 ஆயிரம் லிட்டர்) திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காவலங்காட்டை 1 மணி 10 நிமிடத்தில் வந்தடைந்தது.

அணை திறப்பு பற்றி கேரளம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் கூறுகையில், அணை திறப்பின் போது சேதம் ஏற்படாமலிருக்க குறைந்த அளவாக தண்ணீர் திறந்து விடப்பட்டது என்றார்.

தொழில் துறை அமைச்சர் ராஜீவ் கூறுகையில், கடந்த 2018 இல் , 26 ஆண்டுகளுக்கு பின்னர் செருதோனி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, அதனால் பெருத்த சேதம் ஏற்பட்டது, அந்த நிலை இப்போது ஏற்படாமலிருக்க ஆபரேசன் வாகினி என்ற திட்டம் மூலம் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com