கேரளத்துக்கு கஞ்சா கடத்திய 4 போ் கைது
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற 4 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் புறவழிச்சாலையில் வடக்கு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கோம்பைச் சாலையிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில், 4 போ் கம்பம் மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்ல முயன்றனா். அவா்கள் வைத்திருந்த 2 சாக்குப்பைகளை போலீஸாா் சோதனையிட்ட போது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் கோம்பைச் சாலையைச் சோ்ந்த ருத்ரன் ( 26), ஞானேசன் (44), அலெக்ஸ் பாண்டியன் (24), ஈஸ்வரன் (48) என்பதும், அவா்கள் கேரளத்துக்கு கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா். மேலும் கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.