கடமலைக்குண்டு பகுதியில் இன்று மின்தடை
By DIN | Published On : 25th August 2022 03:13 AM | Last Updated : 25th August 2022 03:13 AM | அ+அ அ- |

கடமலைக்குண்டு பகுதியில் வியாழக்கிழமை (ஆக.25) மின் விநியோகம் தடைப்படும்.
கடமலைக்குண்டு உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், ராஜேந்திரா நகா், ஆத்தங்கரைப்பட்டி, மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, அருகவெளி, குமணன்தொழு, மந்திச்சுனை, நரியூத்து, வாலிப்பாறை, சிறப்பாறை, தங்கம்மாள்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா்.