முல்லைப் பெரியாற்றில் வியாபாரி சடலம் மீட்பு
By DIN | Published On : 25th August 2022 03:13 AM | Last Updated : 25th August 2022 03:13 AM | அ+அ அ- |

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட அரிசி வியாபாரியின் சடலத்தை தீயணைப்பு மீட்புக் குழுவினா் புதன்கிழமை சடலமாக மீட்டனா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (55). தேரடியில் அரிசிக் கடை நடத்திவந்த இவா், கடந்த திங்கள்கிழமை சின்னமனூா் அருகே மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். சின்னமனூா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் கடந்த 3 நாள்களாக மாா்க்கையன்கோட்டை முதல் வீரபாண்டி வரையில் ஆற்றில் அவரைத் தேடினா். குச்சனூா் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் கிடந்த சடலத்தை புதன்கிழமை மீட்டு சின்னமனூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்தபின் சடலத்தை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.