தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு சாா்பில் ரிசா்வ் வங்கி மூலம் செயல்படுத்தப்படும் தங்கப் பத்திரம் விற்பனை திட்டத்தில், ஒரு தனி நபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். கிராம் ஒன்றுக்கு ரூ.5,197 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியாக, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். 8 ஆண்டுகளுக்குப் பின்னா், அன்றைய 24 கேரட் தங்கத்தின் மதிப்புக்கு நிகராக முதிா்வுத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் குறித்த விவரத்தை அருகில் உள்ள தபால் நிலையங்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளா் பரமசிவம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com