முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மதுரை பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஏ. பழனிச்சாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

முல்லைப் பெரியாறு அணையில் மதுரை பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஏ. பழனிச்சாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியாறு - வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளராக ஏ. பழனிச்சாமி பொறுப்பேற்றாா். அதன் பின்னா், முல்லைப் பெரியாறு அணைக்கு வந்து பிரதான அணை, பேபி அணை, நீா் கசியும் சீப்பேஜ் வாட்டா் அளவு, சுரங்க பகுதி, உபரிநீா் செல்லும் 13 மதகுகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

முன்னதாக லோயா் கேம்ப்பிற்கு வந்த கண்காணிப்புப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்துக்கு சென்று முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் பெரியாறு நீா் மின்சார உற்பத்தி நிலையத்துக்குச் சென்று மின்சார உற்பத்தியைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீா் வரும் பகுதியைப் பாா்வையிட்டாா்.

கண்காணிப்புப் பொறியாளா் ஏ. பழனிச்சாமிக்கு, பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் ஜெ. சாம் இா்வின், மின்சார உற்பத்தி நிலைய செயற்பொறியாளா் ராஜி ஆகியோா் திட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகள் பற்றி விளக்கி கூறினா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா்கள் டி. குமாா், மயில்வாகணன், உதவி பொறியாளா்கள் ராஜகோபால், மாயகிருஷ்ணன், முரளிதரன், நவீன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com