தேனியில் இந்து எழுச்சி முன்னணி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து எழுச்சி முன்னணியினா்.
பெரியகுளம் அருகே கைலாசநாதா் மலைக் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றிய நிகழ்ச்சியில் கோயில் அா்ச்சகரை அவமதித்ததாக பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி நகரச் செயலா் ஜி. முத்துராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அா்ச்சகா் ராஜாபட்டரை அவமதித்து, கோயிலில் ஆகம விதிமுறைகளை பின்பற்றி பூஜை நடைபெற இடையூறு செய்த பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பின்னா், கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியனிடம், அதன் நிா்வாகிகள் மனு அளித்தனா்.