கம்பத்தில் நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 11th December 2022 11:34 PM | Last Updated : 11th December 2022 11:34 PM | அ+அ அ- |

கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நிலையூா் ஆதீனம் சுப்பிரமணியானந்த சரஸ்வதி.
தேனி மாவட்டம், கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், கவிஞா் பாரதன் எழுதிய, அண்மையில் நடந்த ஆன்மிக அதிசயங்கள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முக்தி விநாயகா் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தாா். நகராட்சித் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா செல்வக்குமாா், பேரவை புரவலா் பொன்.காட்சிக்கண்ணன், வின்னா் ஸ்போா்ட்ஸ் அலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெ.ந.புவனேஷ்வரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாா்.
துணைத்தலைவா் எஸ்.சேதுமாதவன் வரவேற்றாா். கவிஞா் பாரதன் எழுதிய அண்மையில் நடந்த ஆன்மிக அதிசயங்கள் என்ற நூலை தமிழியக்க தென்தமிழக ஒருங்கிணைப்பாளா் மு.சிதம்பரபாரதி வெளியிட்டாா். இதை,
நிலையூா் ஆதினம் சுப்பிரமணியானந்த சரஸ்வதி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம்.பி.முருகேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா், மதுரை செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியா் மு.செந்தில்குமாா் நூல் குறித்துப் பேசினாா்.
முன்னதாக நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் தமுஎகச மாவட்டச் செயலாளா் அய்.தமிழ்மணி, தமிழியக்க மாவட்ட துணைத் தலைவா் ஆ.முத்துக்குமாா், கவிஞா் பஞ்சுராஜா உள்ளிட்டோா் பேசினா்.