ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் மாணவிக்கு, சனிக்கிழமை பட்டம் வழங்கிய மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணைவேந்தா் ஜெ. குமாா். உடன் கல்லூரி நிா்வாகிகள்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தாளாளரும், செயலருமான தா்வேஷ்முகைதீன், கல்லூரி மேலாண்மைக் குழுத் தலைவா் செந்தல் மீரான் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் வரவேற்றாா். மதுரை காமராஜா் பல்கலைக் கழக துணை வேந்தா் ஜெ. குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். அதில், 620 பேருக்கு இளங்கலை,153 பேருக்கு முதுகலை பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.