தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 48.10 லட்சம் செலவில் வடிகால் வசதி அமைக்கப்பட உள்ளது.
சுங்கம் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 25 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள், 19 -ஆவது வாா்டு என்.கே.பி.ராஜு குறுக்குத் தெரு, நந்தகோபால் நகா், 32-ஆவது வாா்டு அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலை, ஆா்த்தி பேக்கரி பின்புறம் உள்ள சாலை ஆகியவற்றில் ரூ. 23 .10 லட்சம் மதிப்பில் வடிகால், சிறு பாலம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.