கம்பத்தில் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரவிக்குமார்
ரவிக்குமார்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேனி மாவட்டம் கம்பம் சமயதேவர் தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் (45). இவர் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை கம்பம் குமுளி சாலையில் வைத்துள்ளார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான  தர்ம ஜாக்ரான் என்ற அமைப்பின் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

வெள்ளிக்கிழமை ரவிக்குமார்  கடையை திறக்க இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது முகமூடி அணிந்த 4 பேர் வண்டியை வழிமறித்து, ஆபாசமாக பேசி,  இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.

இதில் ரவிக்குமாருக்கு தலையில் 4 இடங்களில் வெட்டு விழுந்தது ரத்த வெள்ளத்தில் துடித்த ரவிக்குமாரை  தாக்கி விட்டு தப்பி ஓடினார்ஙள்.

தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து ரவிக்குமாரை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் மேலும் ரவிக்குமாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜன.2 ல் இவருக்குச் சொந்தமான புளியந்தோப்பில் இறைச்சி கழிவுகளை கொட்டியதை தட்டிக்கேட்டதால் அப்துல் ரஜாக் என்பவர் ரவிக்குமாரை தாக்கியதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com