கம்பத்தில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்கள் பறிமுதல்
By DIN | Published On : 17th July 2022 11:21 PM | Last Updated : 17th July 2022 11:21 PM | அ+அ அ- |

கம்பம் ஓடைக்கரைத் தெருவில் உள்ள மீன் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஓடைக்கரைத் தெரு, வ.உ.சி. திடல் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ரசாயனப் பொருள்கள் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மணிமாறன், மதன்குமாா், பி.சுரேஷ்குமாா் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பாா்வையாளா் எம்.ராஜா ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில் 50 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.