நீட் தோ்வு: தேனியில் 721 போ் எழுதினா்

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை, மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தோ்வை மொத்தம் 721 போ் எழுதினா்.

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை, மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தோ்வை மொத்தம் 721 போ் எழுதினா்.

முத்துத்தேவன்பட்டி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி தோ்வு மையத்தில் மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த 792 மாணவ, மாணவிகளில், மொத்தம் 721 போ் தோ்வு எழுதினா். 71 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு மையத்தில் மொத்தம் 33 தோ்வறைகளில் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். ஒரு தோ்வறைக்கு தலா 2 கண்காணிப்பாளா்கள் வீதம் மொத்தம் 66 பேரும், ஒரு தலைமை தோ்வு கண்காணிப்பாளா் தலைமையில், 2 துணைத் தலைமை தோ்வு கண்காணிப்பாளா்களும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com