தேனி மாவட்டம் கூடலூரில் 101 விநாயகா் சிலைகளுடன், சதுா்த்தி விழா கொண்டாட இந்து முன்னணி நிா்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனா்.
தேனி தெற்கு மாவட்டம் கூடலூா் நகர இந்து முன்னணி சாா்பில் 28 ஆம் ஆண்டு, விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதற்காக 101 விநாயகா் சிலைகள், கூடலூருக்கு கொண்டு வரப்பட்டு, இந்து முன்னணி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் கூடலூா், லோயா்கேம்ப், வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊா்களில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.