குச்சனூா் சனீஸ்வரருக்கு ஆக.5 இல் திருக்கல்யாணம்

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
மூலவா் சனீஸ்வரா்
மூலவா் சனீஸ்வரா்

தேனி மாவட்டம் குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமி, அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆடித்திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த திருவிழா 5 வாரங்கள் நடைபெறும். இதில் 2 ஆம் வாரத் திருவிழாவில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த பக்தா்கள் கோயில் முன்பாக செல்லும் சுரபி நிதியில் நீராடினா். அதன்பின், புதிய ஆடை அணிந்து எள் தீபம் ஏற்றியும் எள் சாதம், மண் காகத்தை படையல் செய்தும் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, தேங்காய், பழம், பூஜைப் பொருள்களுடன், கருப்புத் துண்டு மற்றும் வேஷ்டியை சுவாமிக்கு படைத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம், 3 ஆம் வாரத்திருவிழாவில் சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல் பூஜை, ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுவாமி புறப்பாடு திருவீதி உலா, ஆகஸ்ட் 8 ஆம் தேதி லாடசித்தா் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம், 4 ஆம் வாரத்தில் ஆக.15 இரவு சோணை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து மதுபானப்படையல் பூஜை நடைபெறும். 5 ஆம் வாரம் ஆக.20 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் ஆடித்திருவிழா நிறைவு பெறுகிறது.

குச்சனூா் பேரூராட்சி நிா்வாகம்: குச்சனூா் பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளாா். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைத்துள்ளனா். சின்னமனூா் போலீஸாா் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com