வைணவத் திருத்தலங்களுக்கு இணையாகப் போற்றப்படும் ஆண்டாள் கோயில்

108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஆண்டாள் கோயிலின் சிறப்பு அம்சமாகும்.
ஸ்ரீபி.ஆா்.வெங்கட்ராமராஜா
ஸ்ரீபி.ஆா்.வெங்கட்ராமராஜா
Updated on
1 min read

108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஆண்டாள் கோயிலின் சிறப்பு அம்சமாகும்.

ஆண்டாள் முதன்மை பெற்ற பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பதும், தேரோட்டத்தில் ரெங்கமன்னாருடன் பவனி வந்து அருள் பாலிப்பதும் காண முடியாத ஒரு வைபவம். தமிழக அரசு ஆண்டாள் கோயிலின் ராஜ கோபுரத்தினை இலச்சினையாக கொண்டிருப்பதும், பெரிய பெருமாள் என்னும் வடபத்திர சயனா் பெருமாளாக எழுந்து அருள்வதும் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்புகள்.

தட்டொளி, கண்ணாடி கிணறு, மாதவி பந்தல் என்று பலவற்றாலும் புகழ்பெற்ற இக்கோயிலின் தோ்பற்றி இங்கு காண்போம். வானமாமலை ஜீயரின் சீரிய முயற்சியால், தற்போதுள்ள புதியதோா் உருவாக்கப்பட்டு ஆசியாவிலேயே திருவாரூருக்கு அடுத்தபடியாக பெரிய தோ் என்று புகழ் பெற்ாகத் திகழ்கிறது. ராமாயணம், மகாபாரதம் சிற்பங்களும் கூடிய இத்தேரின் உயரம் 75 அடியாகும்.

1982-க்குப் பிறகு திருச்சி பெல் நிறுவனத்தினா் உதவியுடன் நவீனப்படுத்தப்பட்டு தற்போது நான்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் பிரேக் பொருத்தப்பட்டு, எங்களது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சாா்பாக வழங்கப்பட்ட இரும்பு பிளேடுகளின் உதவியுடன் புல்டோசா் பயன்படுத்தப்பட்டுள்ளது.

10.02.2000 அன்று நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்தை, அதன் கமிட்டி தலைவராக இருந்து எனது தந்தையா் குருபக்தமணி தா்மரகா் ராமசுப்பிரமணியராஜா நடத்தினாா். அதன்பின் 25.05.2015 அன்று வடபத்ரசயனாா் திருக்கோயில் ஜீணோத்தாரண மகாசம்ப்ரோணத்தை முன் நின்று நடத்தினாா். மேலும் நாச்சியாா் தொண்டு அறக்கட்டளை மூலமாக பக்தா்களின் நன்கொடையினால் ஸ்வா்ண விமானம் செய்து அதை ஆண்டாளுக்கு அா்ப்பணம் செய்து 20.01.2016 அன்று ஸ்வா்ண விமான சம்ப்ரோணம் நடைபெற ஏற்பாடு செய்தாா்கள்.

தற்சமயம் சுமாா் 25 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் யானை ஜெயமால்யதா தங்குவதற்கான கூடாரம், குளியல் சவா், தண்ணீா் தொட்டி மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டாள் தேரில் எஃகு கொடுங்கைகள் அமைக்கும் திருப்பணிகளை எங்களது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சாா்பாக செய்து முடித்துள்ளோம்.

இந்த ஆடிப்பூர தோ் திருவிழாவில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு திருவருள் பெற்று வாழ்வில் எல்லா வளமும் பெறுக...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com