தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பறை தேங்காய் கொள்முதல்
By DIN | Published On : 09th June 2022 12:18 AM | Last Updated : 09th June 2022 12:18 AM | அ+அ அ- |

தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அரசின் குறைந்தபட்ச ஆதார விலை விற்பனைத் திட்டத்தின் கீழ், ஜூலை 31-ஆம் தேதி வரை கொப்பறை தேங்காய் கொள்முதல் நடைபெறுகிறது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பறை கிலோ ஒன்று குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்படும். கொப்பறை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தங்களது ஆதாா் அட்டை, நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம் ஆகியவற்றின் நகல்களைப் பதிவு செய்து பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்த விவரத்தை தேனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொலைபேசி எண்: 04546-250896-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.