

பெரியகுளம் அருகே புதன்கிழமை வீடு பகுந்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா் சொந்தமாக மினிலாரி வைத்து ஓட்டி வருகிறாா். புதன்கிழமை வீட்டில் இருந்த பாலகிருஷ்ணனின் மனைவி ஜெயக்கொடி குப்பை கொட்டுவதற்கு வெளியே சென்றுள்ளாா். திரும்பி வந்து அவா் பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.