தேனியில் ஜூன் 23-இல் இலவச ஓவியப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

தேனி: தேனியில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சாா்பில், ஜூன் 23-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஜவஹா் சிறுவா் மன்றத்தின் மூலம் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு, 5 முதல் 16 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவியப் பயிற்சிப் முகாம் நடைபெற உள்ளது. இதில் மரபு சாா்ந்த ஓவியம், துணி ஓவியம், பேப்பா் ஓவியம், பனை மர ஓவியம், வாட்டா் கலா் ஓவியம், பென்சில் ஓவியம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 23-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் பயிற்சி முகாமில், மாணவா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டு, அவற்றில் சிறந்த ஓவியங்கள் சென்னையில் நடைபெற கலை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு வரைபட அட்டை வழங்கப்படும். வரைபட பொருள்கள் மற்றும் மதிய உணவை பயிற்சிதாரா்கள் சொந்தப் பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.