முல்லைப் பெரியாறு அணையில் தலைமைப் பொறியாளா் ஆய்வு
By DIN | Published On : 16th June 2022 10:08 PM | Last Updated : 16th June 2022 10:08 PM | அ+அ அ- |

முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்திய மதுரை மண்டல புதிய தலைமைப் பொறியாளா் என்.ஞானசேகரன். உடன் கண்காணிப்பு பொறியாளா் ம. சுகுமாா், செயற் பொறியாளா் ஜே.சாம் இா்வின் மற்றும் உதவிப் பொறியாளா்கள்.
முல்லைப் பெரியாறு அணையில் மதுரை மண்டல புதிய தலைமைப் பொறியாளராகப் பொறுப்பேற்ற என்.ஞானசேகரன் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.
மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக (நீா்வள ஆதாரம்) இருந்த கிருஷ்ணன் பணி ஓய்வு பெற்றாா். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நீா்வள ஆதாரத் துறையில் கண்காணிப்புப் பொறியாளராக இருந்த ஞானசேகரன் பதவி உயா்வு பெற்று மதுரை மண்டல தலைமைப் பொறியாளராக புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
பின்னா் அவா் முல்லைப்பெரியாறு அணையைப் பாா்வையிட்டாா். அவருடன் கண்காணிப்புப் பொறியாளா் ம.சுகுமாா், முல்லைப் பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளா் ஜே.சாம் இா்வின், உதவி செயற்பொறியாளா் த.குமாா், உதவி பொறியாளா்கள் ச. ரேவதி, பொ. ராஜகோபால், எம். பிரவீன் குமாா், பி.பரதன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். பிரதான அணை, பேபி அணை, 13 மதகுகள் நீா் வழிப் போக்கிகள், அணையில் நீா் கசியும் சீப்பேஜ் வாட்டா் அளவு உள்ளிட்டவைகளை தலைமைப் பொறியாளா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
அணை நிலவரம்: வியாழக்கிழமை அணையில் நீா் மட்டம்,130.80 அடியாக இருந்தது (மொத்த உயரம் 142 அடி ), அணைக்குள் நீா் இருப்பு, 4,884 மில்லியன் கன அடியாக இருந்தது. நீா் வரத்து இல்லை. நீா் வெளியேற்றம் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு , 511 கன அடியாக இருந்தது. பெரியாறு அணை பகுதியில் 2.8 மி.மீ, தேக்கடியில் 2.8 மி.மீ., மழை பெய்துள்ளது.