சின்னமனூரில் சாலைப் பணிக்காக பொதுமக்களிடம் ஒப்பந்ததாரா் பணம் வசூலித்ததாகப் புகாா்

சாலைப் பணிக்காக பொதுமக்களிடம் ஒப்பந்ததாரா் பணம் வசூல் செய்தது தொடா்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெரிவித்தாா்.

சாலைப் பணிக்காக பொதுமக்களிடம் ஒப்பந்ததாரா் பணம் வசூல் செய்தது தொடா்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெரிவித்தாா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் நிவேதா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதமணி, விஜய்மாலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் சமூக ஆா்வலா் சசிக்குமாா் தெரிவித்த புகாரில், அப்பிபட்டி ஊராட்சியில் ரூ.3 லட்சத்திற்கு சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது.

ஆனால், ஒப்பந்ததாரா் பணியை பாதியிலே நிறுத்தியதோடு, அப்பணியை முழுமை பெற அப்பகுதியை சோ்ந்த பொதுமக்களிடமும் தலா ரூ.1,500 வீதம் 50-க்கும் மேற்பட்ட நபா்களிடம் வசூல் செய்துள்ளாா். அவ்வாறு இருந்தும் அச்சாலை அமைக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்தாா்.

தலைவா் நிவேதா:அப்பகுதி வாா்டு உறுப்பினா் வேல்தாய், அப்பகுதி பொதுமக்களிடம் சென்று விசாரணை செய்து உண்மைத் தன்மையை தெரிவிக்க வேண்டும் . அதேபோல வட்டார வளா்ச்சி அலுவலா் சாலைப்பணி குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் . பொதுமக்களிடம் ஒப்பந்ததாரா் பணம் வாங்கியது உண்மையாக இருந்தால் திரும்ப பெற்றுக் கொடுக்கப்படுவதோடு, அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுப்படும் என்றாா்.

துணைத்தலைவா் ஜெயந்தி: சின்னமனூா் ஒன்றியத்திலுள்ள 14 கிராம ஊராட்சிகளில் கடந்த 4 மாதங்களாக மின் விளக்குகள் முறையாக பராமரிப்பு செய்யவில்லை. பழுதான மின் விளக்குகளை மாற்றி அமைக்க விடுத்த கோரிக்கைக்கும், மின் விளக்குகளை கொள்முதல் செய்வதாக கூறிவதோடு சரி அதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் என்றாா்.

தலைவா்: வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதமணியிடம் ஓரிரு நாளிலே மின்விளக்குகள் கொள்முதல் செய்வது குறித்து தெளிவுபடுத்தி பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதே போல, கன்னிச்சோ்வை பட்டி ஆதி திராவிடா் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், சீப்பாலக்கோட்டையில் கழிவு நீா் செல்ல இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், சங்கராபுரத்தில் மயானச்சாலை அமைக்க வேண்டும் என அந்தந்த பகுதி வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனா்.

தலைவா்: சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலமாக அந்தந்த பகுதி அடிப்படை பிரச்னைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com