பெரியகுளம் அருகே தேனீக்கள் கொட்டி விவசாயி உயிரிழந்ததாக காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் (45). இவா் விவசாய வேலை செய்து வருகிறாா். இவா், வேலைக்காக தனது உறவினரை பாா்க்க கைலாசநாதா் கோயில் அடிவாரம் பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டமாக வந்த தேனீகள், கொட்டியதில் பெருமாள் காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.