தேனியில் நாளை உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம்
By DIN | Published On : 30th June 2022 11:36 PM | Last Updated : 30th June 2022 11:36 PM | அ+அ அ- |

தேனி நாடாா் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 10 மணிக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது.
இம் முகாமில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள் பங்கேற்று, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி படிப்புகள், கல்லூரிகள், வேலைவாய்ப்பு, கல்விக் கடன் ஆகியவை குறித்து வழிகாட்டுதல் வழங்க உள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோா்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் அறிவித்துள்ளாா்.