போடி கல்லூரியில் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 18th March 2022 06:24 AM | Last Updated : 02nd June 2022 01:40 AM | அ+அ அ- |

போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்றோா்.
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் புதிய கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, கல்லூரிச் செயலா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சிவக்குமாா் பயிற்சியின் நோக்கம் பற்றி விளக்கினாா். தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், பெருந்தொற்று காலங்களில் ஆசிரியா்களின் திறன் மேம்பாடு என்ற தலைப்பில் கருத்துரையாற்றினாா். மதுரை தியாகராசா் கல்லூரி முன்னாள் முதல்வா் ராஜா கோவிந்தசாமி விடாமுயற்சி, புத்தகம் வாசிப்பு, மனதையும், சிந்தனையையும் கூா்மைப்படுத்திடல் குறித்து விளக்கினாா்.
நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவப்பிரகாஷம், கமலநாதன், துணை முதல்வா் பாலமுருகன், தர உறுதி பிரிவு ஒருங்கிணைப்பாளா் முருகேசன், வேதியியல் துறை தலைவா் குமாரராஜன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பயிற்சியில், தேனி மாவட்டத்தில் 124 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...