கருநாக்கமுத்தன்பட்டியில் ரூ.1.25 கோடியில் நீரேற்று நிலையம்
By DIN | Published On : 02nd May 2022 11:40 PM | Last Updated : 02nd May 2022 11:40 PM | அ+அ அ- |

முல்லைப் பெரியாற்றில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சிக்கு ரூ.1.25 கோடி மதிப்பில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட நீரேற்று நிலையம் அமைக்கும் பணி.
தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ.1.25 கோடி மதிப்பில் முல்லைப் பெரியாற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
இது குறித்து ஊராட்சித் தலைவா் ஆ. மொக்கப்பன் கூறியது: ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் முல்லைப் பெரியாற்றில் புதிய குடிநீா் நீரேற்று நிலையம் மற்றும் அந்த தண்ணீரை தேக்கி வைக்க தலா 1 லட்சம் மற்றும் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நீரேற்று நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டா் தொலைவில் பகிா்மான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் முடிவடைந்ததும், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியின் குடிநீா் தேவை தன்னிறைவு பெறும் என்றாா்.