தேனியில் மே 6-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
By DIN | Published On : 02nd May 2022 11:39 PM | Last Updated : 02nd May 2022 11:39 PM | அ+அ அ- |

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மே 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு, தையல் மற்றும் தொழிற் பயிற்சிப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாம் குறித்த விவரத்தை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தின் 04546-254510 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.