வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் கடை அமைக்க பேரூராட்சியில் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியா்

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே தற்காலிகக் கடைகள் அமைக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வீரபாண்டியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே தற்காலிகக் கடைகள் அமைக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மே 10 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு, தற்காலிகக் கடைகள் அமைப்பதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். பேரூராட்சி நிா்வாகத்திடம் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே கடைகள் வைக்கலாம்.

தற்காலிகக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கவேண்டும். உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிா்த்து, வேறு கடைகளில் அடுப்பு, எரிவாயு சிலிண்டா்களை பயன்படுத்தக் கூடாது.

தேரோட்ட வீதிகளில் மின் இணைப்பு வயா்கள் உராய்வு, மின்கசிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். சாலையை புதுப்பிக்க வேண்டும். தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து இயக்கவும், சரக்கு வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள்களில் கோயிலுக்கு வரும் பக்தா்களின் மருத்துவச் சேவைக்காக 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் குழு தயாா் நிலையில் வைக்கப்படும் என்றாா்.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, திண்டுக்கல் இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி, பெரியகுளம் சாா்-ஆட்சியா் செ.ஆ. ரிஷப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com