உணவக மாடியிலிருந்து தவறி விழுந்து ஊழியா் பலிஉறவினா்கள் போராட்டம்
By DIN | Published On : 12th May 2022 12:00 AM | Last Updated : 12th May 2022 12:00 AM | அ+அ அ- |

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்கள்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு உணவக மாடியிலிருந்து தவறி விழுந்து ஊழியா் உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரைச் சோ்ந்த இஸ்மாயில் மகன் மஹபூப்கான் (31). இவா், கோம்பையில் தனியாா் உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்தாா். இவருக்கு ஆண் மற்றும் பெண் என 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உணவக மாடியில் துணியை காயப் போடச் சென்றவா் எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த மஹபூப்கான், உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
உறவினா்கள் போராட்டம்: இதைத் தொடா்ந்து, உணவக உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை பிரேதத்தை வாங்க மாட்டோம் எனவும் கூறி மருத்துவமனை முன் மஹபூப்கானின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோம்பை காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை: இதையடுத்து, போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா், கோம்பை காவல் நிலையத்தில் அவா்களுடன் புதன்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினா்கள் தெரிவித்தனா். அதில், முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.