

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த ஊராட்சியில் ஒன்றாவது வாா்டில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த (ஏப்.30) தேனிக்கு வருகை தந்தபோது காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தாா்.
இந்நிலையில், அந்த சுகாதார வளாகம் தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், ராயப்பன்பட்டி ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.