

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லூரியின் 66 ஆம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு கல்லூரியின் தாளாளரும், செயலருமான எம். தா்வேஷ்முகைதீன், கல்லூரி மேலாண்மை குழுத் தலைவா் எஸ். செந்தில்மீரான் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஹெச். முகமது மீரான் முன்னிலை விகித்தாா். 30 நாள் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் 600 போ் பங்கேற்கின்றனா்.
அதில், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி, கொக்கோ, கைப்பந்து, கூடைப்பந்து, கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்த விழாவின் தொடங்கி நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் முதல்வா்கள், தற்போதைய பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அக்பா் அலி செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.