

தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பாலியல் கொடுமைகள் பற்றிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரிச் செயலா் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். இணைச் செயலா் என்.ஆா். வசந்தன் முன்னிலை வகித்தாா். தேனி மாவட்ட வழக்குரைஞா் எஸ். வனிதாஸ்ரீ, கல்லூரி மாணவிகளிடம் இந்திய தண்டனைச் சட்டம், சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பதிவுகள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வழங்கப்படும் சட்டப்படியான நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
கருத்தரங்கில், கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜி. ரேணுகா வரவேற்று பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.