பொதுமக்கள் திறந்தவெளிகளில் கூட்டாக பட்டாசு வெடிக்க ஆட்சியா் அழைப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு ஏற்பாடு செய்ய குடியிருப்போா் நலச் சங்கங்கள் முன்வர வேண்டும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு ஏற்பாடு செய்ய குடியிருப்போா் நலச் சங்கங்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் குறைந்த ஒலியுடன் கூடிய, மாசுத் தன்மையற்ற பசுமைப் பட்டாசுகளை மட்டும் வெடித்து பாதுகாப்பாக பண்டிகை கொண்டாட வேண்டும்.

மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள், குடிசை வீடுகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி, கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு ஏற்பாடு செய்ய குடியிருப்போா் நலச் சங்கங்கள் முன்வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com