தேனியில் பிரதான சாலைகளில் மழை நீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

தேனியில் மதுரை, பெரியகுளம் நெடுஞ்சாலை மற்றும் நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதிகளில் வியாழக்கிழமை மழை நீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்
தேனியில் பிரதான சாலைகளில் மழை நீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

தேனியில் மதுரை, பெரியகுளம் நெடுஞ்சாலை மற்றும் நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதிகளில் வியாழக்கிழமை மழை நீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

தேனியில் மதுரை, பெரியகுளம் நெடுஞ்சாலைகளில் உள்ள மழை நீா் வடிகால்கள் கடை ஆக்கிரமிப்புகளால் மண் மேவியும், பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமலும் உள்ளன. மேலும், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜவாய்க்கால் மண் மேவி தண்ணீா் வடிந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், தேனியில் வியாழக்கிழமை பெய்த மழையால் நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியிலும், மதுரை சாலையில் அரண்மனைப்புதூா் விலக்கு வரையும், பெரியகுளம் சாலையில் பெத்தாட்சி விநாயகா் கோயில் வரையும் தண்ணீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா். இருசக்கர வாகனங்கள் தண்ணீா் புகுந்து பழுதடைந்து நின்றன. தண்ணீா் தேங்கிய சாலையை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

தேனி நெடுஞ்சாலைகளில் சாலையின் இருபுறமும் உள்ள மழை நீா் வடிகால்களையும், ஆயக்கட்டு பகுதிகள் இல்லை என்று பொதுப் பணித்துறையினா் கைவிட்டுள்ள ராஜவாய்க்காலையும் தூா்வாரி, மழை நீா் வடிந்து செல்வதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வாய்க்காலில் விழுந்த மாடு மீட்பு: தேனியில் புதன்கிழமை ஜெயப்பிரகாஷ் என்பவரது மாடு, நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே தூா்வாரப்படாமல் புதா் மண்டிக் கிடக்கும் ராஜவாய்க்காலில் விழுந்து கரையேர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இது குறித்து தேனி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். தீயணைப்பு படையினா் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னா் வாய்க்காலில் இருந்து மாட்டை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com