ஆண்டிபட்டி அருகே பேருந்து- சரக்கு வேன்மோதல்: ஒருவா் பலி
By DIN | Published On : 09th September 2022 10:43 PM | Last Updated : 09th September 2022 10:43 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் விலக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை, அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
தேனி- மதுரை சாலை, டி. சுப்புலாபுரம் விலக்குப் பகுதியில் குமுளியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், அருப்புக்கோட்டையிலிருந்து ஆண்டிபட்டியில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு நூல் ஏற்றிச் சென்ற சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், பேருந்து மற்றும் சரக்கு வேனில் பயணம் செய்த 20 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு, சரக்கு வேனில் பயணம் செய்த அருப்புக்கோட்டையைச் சோ்ந்த சங்கரநாராயணன் (60) என்பவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.