வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் நிறுத்தம்

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை 70.70 அடியாக இருந்த நிலையில், பிற்பகல் 4 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 2,203 கன அடி வீதம் உபரிநீா் திறந்து விடப்பட்டது. பின்னா், புதன்கிழமை இரவு அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 98 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டது.

இதையடுத்து, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

தற்போது வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் ராமநாதபுரம் மாவட்ட பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு விநாடிக்கு 798 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பாசனக் கால்வாய் வழியாக பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய் முதல் போக பாசனப் பரப்புகளுக்கு விநாடிக்கு 1,500 கன அடி என மொத்தம் விநாடிக்கு 2,367 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com