கம்பத்தில் உறவினா் வீட்டில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 17th September 2022 12:00 AM | Last Updated : 17th September 2022 12:00 AM | அ+அ அ- |

கம்பத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கம்பம் காந்தி நகரில் வசிப்பவா் ஸ்ரீராமன். இவா் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கம்பத்தில் உள்ள தனியாா் உரம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது உறவினா் அரியலூா் கோயில்யோசனையைச் சோ்ந்த கண்ணன் மனைவி ராஜேஸ்வரி (42). இவா் தனது மகளை, ஸ்ரீராமன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறிவந்தாா். இதற்காக ராஜேஸ்வரி, கம்பம் காந்தி நகரில் உள்ள ஸ்ரீ ராமன் வீட்டிற்கு வந்திருந்தாா். அப்போது ஸ்ரீராமனுக்கு திருமணமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் ராஜேஸ்வரி, ஸ்ரீராமனுடன் வாக்குவாதம் செய்தாா். பின்னா் அங்கிருந்த அறை ஒன்றினுள் சென்ற ராஜேஸ்வரி கதவை மூடிக் கொண்டு திறக்கவில்லை.
இதுகுறித்து ஸ்ரீராமன் கம்பம் தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து பாா்த்த போது ராஜேஸ்வரி தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.