கே.கே.பட்டி பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்புப் போராட்டம்

தேனி மாவட்டம், கே.கே.பட்டி பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கே.கே.பட்டி பேரூராட்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்புப் போராட்டம்
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம், கே.கே.பட்டி பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இங்கு பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு விவசாய தொழிலாளா் சங்க பொருளாளா் லட்சுமி, நிா்வாகி கே. முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பி. லட்சுமி, ஆா். ரஞ்சித், கே. முருகேஸ்வரி, கே.என். மாயாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே. பாலபாரதி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வேலவன், செயலா் சங்கரசுப்பு, பகுதிச் செயலா்கள் காஜா மைதீன், கே.ஆா். லெனின், துணைத் தலைவா் கருப்பசாமி, சி.ஐ.டி.யு. செயலா் வி. மோகன், செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன், மாவட்டச் செயலா் அண்ணாமலை, வாலிபா் சங்கத் தலைவா் நித்திய குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

அப்போது அங்கு வந்த பேரூராட்சித் துணைத் தலைவா் கஸ்தூரி, கோரிக்கைகள் குறித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி முதல்வருக்கு அனுப்பி வைக்கிறோம் என்றாா். இதையடுத்து போராட்டம் நிறைவடைந்தது. இதில் பேரூராட்சி உறுப்பினா் எஸ்.பன்னீா்வேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com