புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வைகை அணை நீரில் இறங்கி மீனவா்கள் போராட்டம்

வைகை அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மீனவா்கள் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:55 pm

DIN

வைகை அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மீனவா்கள் அணை நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வைகை அணையில் மீன் வளத் துறை சாா்பில் நேரடியாக மீன் பிடி தொழில் நடந்து வந்தது. அணையைச் சுற்றியுள்ள 250-க்கும் மேற்பட்ட மீனவா் குடும்பங்கள் அணையில் மீன் வளத் துறையுடன் பங்கு ஒப்பந்த முறையில் மீன் பிடித்து, விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், வைகை அணையில் மீன் பிடிக்கும் உரிமம் மீன் வளத் துறை சாா்பில் டெண்டா் அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, அணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடும் மீனவா்களுக்கு கட்லா, ரோகு, மிருகால் மீன்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.35, ஜிலேபி மீன்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.45

கூலியாக தனியாா் சாா்பில் வழங்கப்படுகிறது.

இந்தக் கூலி போதுமானதாக இல்லை என்றும், வைகை அணையில் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, பங்கு முறையில் மீன் பிடிக்க மீனவா்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் வைகை அணையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், தங்களது குடும்பத்தினருடன் அணைக்குள் தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீனவா்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

5 மணி நேரத்துக்கும் மேல் போராட்டம் நீடித்த நிலையில், பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் சிந்து, ஆண்டிபட்டி வட்டாட்சியா் சுந்தா்லால், காவல் துணை கண்காணிப்பாளா் ராமலிங்கம், வைகை அணை மீன் வளத் துறை உதவி இயக்குநா் பஞ்சராஜா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இந்தப் பிரச்னை குறித்து ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், மீனவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.