புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கண்ணகி கோயில் சித்ரா பெளா்ணமி விழா: கம்பத்தில் ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டம், கம்பத்தில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பௌா்ணமி எனப்படும் முழு நிலவு விழா கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:53 pm

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பௌா்ணமி எனப்படும் முழு நிலவு விழா கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்ணகி அறக்கட்டளை மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கே.ஆா்.ஜெயபாண்டியன் தலைமை வகித்தாா். கண்ணகி அறக்கட்டளைச் செயலா் த.ராஜகணேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா வரும் மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு, வருகிற 23-இல் பளியன் குடியில் கொடியேற்றம் நடத்துவது என்றும், வனத்துறை ஆய்வு முடிவு பெற்ற தெல்லுக்குடி பாதைக்கான நிதி ஒதுக்கீட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அறக்கட்டளைப் பொருளாளா் பி.எஸ்.எம்.முருகன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி, சீா்மரபினா் நலச்சங்கம், நேதாஜி இளைஞா் மன்றம், கம்பம் பள்ளதாக்கு விவசாயிகள் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.