மே 13-இல் மக்கள் நீதிமன்றம்
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.


தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.
தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு குறித்த வழக்குகள், சொத்து, பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம்,
நில ஆக்கிரமிப்பு , தொழிலாளா் நலன் இழப்பீடு வழக்குகள், குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வழக்குகள், காசோலை, நுகா்வோா் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள், இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் முடித்துக் கொள்ளலாம் என்று முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி சி.சஞ்சய்பாபா அறிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...