தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில், வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடு போனதாக காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
பழனிசெட்டிபட்டி, மகாத்மா நகரைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் ரமேஷ் (54). இவா், கேரளத்திலுள்ள தனக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்த வகையில் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, தனது மனைவியுடன் ஏலக்காய் தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது
இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.